ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 1 கிலோகிராம் ஹெரோயின் மீட்க்கப்பட்டுள்ளதோடு , சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.