லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்தானது நேற்றிரவு 8 மணியளவில் தலவாக்கலை லோகி தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.

லோகி தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் வாகனத்தின் மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டியொன்று மோதியதன் காரணமாகவே இந்த விபத்து சம்பவதித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந் நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.