கொரோனா தொற்றுக் காரணமாக மூன்று நாடுகளில் சிக்கியிருந்த மேலும் 339 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -605 என்ற விமானத்தில் மொத்தம் 287 இலங்கையர்கள் இன்று அதிகாலை 4.00 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் துபாயிலிருந்து ஈ.கே.-648 என்ற எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் 47 இலங்கையர்கள் அதிகாலை 1.06 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோன்று இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு,எல் -1042 என்ற விமானத்தில் ஐந்து இலங்கையர்கள் அதிகாலை 5.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.