ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 223 ஓட்டங்களை குவித்தும் தோல்வியை தழுவியது. 

224 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை எடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.

இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் முருகன் அஷ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என சச்சின் டெண்டுல்கர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

“ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவரான ஸ்டீபன் ஸ்மித், சஞ்சு செம்சன், ராஹுல் திவேதியா ஆகியோரது துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது. 

பெரிய இலக்கை வெற்றிகரமாக விரட்டினார்கள். நிதானமாகத் துடுப்பொடுத்தாடி பிறகு அதிரடியை வெளிப்படுத்தினார்கள்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வேகப்பந்து வீரர்கள் யோர்க்கர்களை வீசாதது ஆச்சரியமாக இருந்தது. இதேபோல சுழற்பந்து வீரர் முருகன் அஷ்வினையும் சரியாக பயன்படுத்தவில்லை. இது அதிர்ச்சி அளித்தது”இவ்வாறு அவர் கூறினார்.

முருகன் அஷ்வின் இக்போட்டியில் 1.3 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.