குவைத் மன்னர் ஷேக் சபா காலமானார்

Published By: Vishnu

29 Sep, 2020 | 08:16 PM
image

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் சபா 91 ஆவது வயதில் அமெரிக்காவில் ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் காலமாகியுள்ளார்.

1929 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக் சபா நவீன குவைத்தின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பியாக பரவலாகக் கருதப்படுகிறார்.

1963 - 2003 வரையான 40 ஆண்டுகள் குவைத்தின் வெளியுறவு அமைச்சராக ஷேக் சபா பணியாற்றியதுடன், பிரதமர் பதவியையும் வகித்துள்ளார்.

ஜாபிர் அல் -அஹ்மத் அல் சபாவின் மரணத்திற்கு பின்னர் 2006 ஜனவரி மாதம் ஷேக் சபா மன்னராக பொறுப்பேற்றார்.

இந் நிலையில் உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் அறுவை சிகிச்சை செய்த ஷேக் சபா மேலதிக வைத்திய சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

நான்கு அரபு நாடுகளால் கட்டார் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது போன்ற பிராந்திய பிரச்சினைகளை தீர்க்க ஷேக் சபா இராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுத்தார்.

மேலும் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான ஈராக், சிரியா போன்ற நாடுகளுக்கு உதவ மாநாடுகளை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17