(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்கு சொந்தமான லக்திவ பொறியியலாளர் நிறுவனத்தினால் புதுப்பிக்கப்பட்ட 17 மில்லியன் ரூபா பெறுமதியான 9 அரச பஸ்களும் அவசர சேவை பஸ்ஸொன்றும் போக்குவரத்து அமைச்சினால் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ வைபவம் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று லக்திவ பொறியியலாளர் நிறுவனத்தில் நடைபெற்றது. 

நிகவரெட்டிய, மாத்தறை, பாணந்துரை, கிரிந்திவௌ, அழுத்கம, கெஸ்பேவ, எல்பிட்டிய மற்றும் கல்கமுவ ஆகிய பிரதேசங்களுக்கு இந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.