13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 11 ஆவது ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளன.

இப் ‍போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணித் தலைவர் அய்யர் களத்தடுப்பை தெரிவுசெய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

அபுதாபயில் நடைபெறும் இப் போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

டெல்லி அணியானது தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சூப்பர் ஓவரிலும், சென்னை சூப்பர் கிங்ஸை 44 ஓட்ட வித்தியாசத்திலும் வீழ்த்தியுள்ளது.

டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நேர்த்தியாக உள்ளது. எனினும் அந்த அணியின் பீல்டிங் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். 

முன்னாள் சாம்பியனான சன் ரைஸர்ஸ்  தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதலாவது ஆட்டத்தில் பெங்களூருவிடமும், அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும் வீழ்ந்தது. 

ஐதராபாத் அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. 

இந் நிலையில் கடந்த போட்டிகளில் அடைந்த பின்னடைவை சரிசெய்ய ஐதராபாத் அணி இன்றைய தினம் வெற்றிபெற தீவிரம் காட்டும். 

இவ்விரு அணிகளும் இதுவரை 15 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 9 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.