யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் (29.09.2020) இன்று மாலை 3.00 மணியளவில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவில் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்