வவுச்சருக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கான துணியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக் கொள்வதற்கான வவுச்சரை வழங்குவதற்கு பதிலாக தேசிய துணி தயாரிப்பாளர்களின் மூலம் சீருடைக்கான துணியை வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பெறுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு உள்ளூர் துணி தயாரிப்பாளர்கள் மாத்திரம் விலை விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். 

இந்த தயாரிப்பாளர்களினால் மொத்த துணி தேவையில் சுமார் 40 சதவீதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இத்துறை பரிசோதனையின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி அளவில் அனைத்து பாடசாலைகளின் சீருடைக்கான துணி தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த தயாரிப்பாளர்களுக்கு ஆற்றல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாடசாலை சீருடை துணியை வழங்குவதற்கு அமைவாக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த விடயங்களை கவனத்திற் கொண்டு தேவையான மொத்த சீருடைக்கான துணியை உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் கொள்வனவு செய்வதற்கும் இதற்கமைவாக வவுச்சருக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கான துணியை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.