துப்பாக்கியுடன் வர்த்தக நிலையமொன்றிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையனை கடைச்சிப்பந்தி விரட்டியடித்த சம்பவம் அமெரிக்காவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

Maryland இல் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் நுழைந்து குறித்த வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் சிப்பந்தியை மிரட்டி பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

குறித்த சிப்பந்தி சமயோசிதமாக செயற்பட்டு குறித்த நபரிடமிருந்த துப்பாக்கியை திடீரென பறித்துள்ளார்.

இதனால் பயந்து போன குறித்த நபர் வர்த்தக நிலையத்தை விட்டு வெளியே தப்பியோடியுள்ளார்.