சீனாவில் சிறுவனுக்கு பிளேக் நோய் கண்டுபிடிப்பு..!: அவசரகால நிலை பிரகடனம்

Published By: J.G.Stephan

29 Sep, 2020 | 05:11 PM
image

சீனாவில் புபோனிக் பிளேக் எனப்படும் ஒருவித தொற்று நோய்க்கு சிறுவன் ஒருவன் ஆளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

சீனாவிலுள்ள யுனான் பிராந்தியத்தில் மெங்காய் மாவட்டத்திலேயே குறித்த சிறுவன் இனங்காணப்பட்டுள்ளான்.

இந்தச்சிறுவன் வைத்தியர்கள் கடந்த வியாழக்கிழமை பரிசோதனைக்குட்படுத்திய போதிலும், நோய் தொடர்பில் உடனடியாக உறுதிசெய்ய முடியாது போனதாகவும், ஏற்கனவே என்டிபயாடிக்குகளை குறித்த சிறுவன் பயன்படுத்தியிருந்ததால், குறித்த நோயை இனங்காணுவது தாமதமானதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

தேசிய சுகாதார அமைப்பானது சமீபத்தில் மேற்கொண்ட  ஆய்வுகளிலேயே  அந்த பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் பாதிப்பை உறுதி செய்தனர். மட்டுமின்றி இந்த மாத தொடக்கத்தில் இப்பகுதியில்  எலி தொடர்பான கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளதாக  உள்ளூர் நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து நான்காம் கட்ட அவசர நிலையை தற்போது பிரகடப்படுத்தியுள்ளனர். சீனாவின் வடக்கு அண்டை நாடான மங்கோலியா அதன் மொத்த 21 மாகாணங்களில் குறைந்தது 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆகஸ்டில், சீன பிராந்தியமான மங்கோலியாவின் ஒரு பகுதியில் புபோனிக் பிளேகால் ஒருவர் இறந்த நிலையில் அதிகாரிகள் ஒரு கிராமம் முழுவதையும் மூடிவிட்டனர். பிளேக் நோயானது இதுவரை மனித குலம் எதிர்கொண்டதில் மிகவும் ஆபத்தான பெருந்தொற்றாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் ஆன்டிபயாடிக் மருந்துகளின் வருகையை அடுத்து பிளேக் பெருந்தொற்று முற்றாக அழிக்கப்பட்டது.

ஆனால் சமீக காலத்தில் பிளேக் மீண்டும் பரவலாக காணப்பட்டு வருகிறது என்பதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52