உலகின் மிகப் பெரிய இரும்புத் தாது ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களில் ஒன்றான ஹெட்லெண்ட் துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டள்ள கப்பலில் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 10 பேர் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு மாற்றப்பட்டுள்ளனர், ஏழு பேர் கப்பலில் உள்ளதாகவும் கப்பல் உரிமையாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

20 பிலிப்பைன்ஸ் நாட்டினரையும் கேப்டனையும் ஏற்றி வந்த இக் கப்பலானது செப்டம்பர் 16 முதல் ஹெட்லெண்ட்டின் வடமேற்கு கடற்கரையிலிருந்து ஒன்பது கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ளது.

இந் நிலையில் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு உதவி மற்றும் மருத்துவ பராமறிப்புக்காகவும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவு படையினரை அனுப்பி வைத்துள்ளது.