அரலங்வில பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சட்ட விரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரலங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொக்குண பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் உழவு இயந்திரம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நெலும்வௌ பகுதியைச் சேர்ந்த 44, 48 மற்றும் 20 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.