(செய்திப்பிரிவு)

கல்கிஸ்ஸை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸை - பீரிஸ் வீதி பகுதியில் இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று  திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை - படோவிட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போதே மெதமுலன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.