கண்டி, புவெலிகட பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் கண்டி பொலிஸாரால் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 20 ஆம் திகதி குறித்த ஐந்து மாடிக் கட்டிடமானது அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இடிந்து வீழ்ந்தமையினால் வீட்டிலிருந்த ஐவர் இடிபாடுகளில் சிக்குண்டனர்.

பின்னர் அவர்களில் இருவர் மீட்கப்பட்டதுடன், ஒன்றரை மாத குழந்தையும் தம்பதியினரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.