திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 ஹெரொயின் போதைப் பொருள் துண்டுகளுடன் இருவரை  இன்று(29) அதிகாலை கைது  செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், வான்எல,மற்றும் ரஜஎல பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு  கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரும் ஒரு கிராமும் 498 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளை 34 பக்கற்றுகளில் பொதி செய்து வைத்திருந்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.