குழந்தைகளுக்கு கொரோனாவிற்கான தடுப்பு மருந்தாக செயற்படும் தாய்பால்! ஆய்வில் தகவல்

Published By: Jayanthy

29 Sep, 2020 | 12:13 PM
image

கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகளை அதிகமாக பாதிக்காமல் இருப்பதற்கு  தாய்ப்பால் உதவக்கூடும், என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படாவிட்டாலும் கூட, தாயின் பால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்கிருமிகளின் தொற்று மற்றும் தாக்கத்தை  தடுப்பதாகக் சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததுள்ளனர்.

A letter of encouragement to all breastfeeding mothers

மேலும் ஆடு, மாடுகள் போன்ற பிற விலங்குகளின் பாலினை விடவும் தாய்பால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெய்ஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தாய்பால் தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையை ஆதரிப்பதாகக் அறிவித்துள்ளது. 

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், 

2017 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் - தொற்றுநோய்க்கு முன் - உயிரணுக்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்.

ஆரோக்கியமான செல்கள் மனித தாய்ப்பாலில் கலந்தனர். பின்னர் செல்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கப்பட்டன.

இதன் போது பெரும்பாலான வைரஸ்கள் கலங்களுடன் பிணைக்கவோ அல்லது நுழையவோ இல்லை. மீறி கலங்களுக்குள் நுழைந்த வைரஸால் அதன் நகல்களை உருவாக்கவும் முடியவில்லை.

இதன் மூலம், நோரோ வைரஸ் மற்றும் பக்டீரியா போன்ற பிற வைரஸ்களைப் போலவே தாய்ப்பால் கொரோனா வைரஸைத் தடுக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக இதே ஆராய்ச்சி  குழு மேற்கொண்ட ஆய்வில், தாய்பால் விலங்குகளின் சிறுநீரக உயிரணுக்களில் கொரோனா வைரஸ் தொற்றுவதை  தடுப்பதாக கண்டறிந்திருந்தனர். லாக்டோஃபெரின் போன்ற பிற புரதங்களை விட, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பால் புரதம் வைரஸை செயலிழக்கச் செய்வதாக அவர்கள் தீர்மானித்தனர்.

பசுக்கள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட விலங்குகளின் பால் பரிசோதிக்கப்பட்டபோது விலங்குகளிடமிருந்து வரும் பால் மனித பாலின் கிட்டத்தட்ட 100 சதவீதத்துடன் ஒப்பிடும்போது வைரஸை தடுக்கும் ஆற்றல் சுமார் 70 சதவீதம் அடக்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29