'காஞ்சனா' பட புகழ் நடிகை ராய் லட்சுமி 'பாய்ஸன் 2 ' என்ற தொடர் மூலம் வலைதளத் தொடர் நடிகையாகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

முப்பது வயதை கடந்த பின்னரும் இளமையாக காட்சியளிக்கும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை ராய் லட்சுமி. 

2005 ஆம் ஆண்டில் வெளியான 'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும்,  'தல' அஜித்தின் 'மங்காத்தா', ராகவா லோரன்ஸின் 'காஞ்சனா' படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 

இவர் தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 

ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் ஜி5 என்னும் டிஜிற்றல் தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் 'பாய்ஸன் 2' என்ற வலைதள தொடரில், சாரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராய் லட்சுமி நடித்திருக்கிறார்.

ரசிகர்களின் ரசனை மாற்றங்களை உடனடியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்புகளில் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதில் ராய் லட்சுமியும் இடம் பிடித்திருக்கிறார். 

இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே இந்த தொடர் ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றிபெற்ற தொடரின் இரண்டாவது அத்தியாயம் என்பதும், விரைவில் இந்த தொடரின் தமிழ் டப்பிங் வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.