பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்த வரைவில் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்த வரைவினை சவாலுக்குபட்டுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39 அடிப்படை  மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமல் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போதே சட்டமா அதிபர் இதனை அறிவித்துள்ளார்.