போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் விநியோகித்த குற்றச்சாட்டுக்காக கலால் திணைக்கள அதிகாரி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு கொஸ்கமுகவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 653.3 மில்லி கிராம் மென்டி எனப்படும் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது 10 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.