கட்டுநாயக்க கொழும்பு அதிவேகப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் சரியான நேரத்திற்கு பயணிக்க முடியாதவாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர் .

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் பெலியகொட பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னரே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் வேகமாக தமது பயணத்தை மேற்கொள்வதற்கு, நேரத்தை சேமிப்பதற்கும் கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.

எனினும், வாகன நெரிசல் காரணமாக சரியான நேரத்திற்கு பயணத்தை முன்னெடுக்க முடியாதுள்ளது.

எனவே இதில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து,வேகமாக சென்று வருவதற்குரிய இலகு நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொள்ளுமாறும் பயணிகள், சாரதிகள் மேலும் தெரிவித்துள்ளனர் .