கண்டி, புவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததன் பின்னணியில் உள்ள காரணங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை நிறைவு செய்வதற்கு மேலும கால அவகாசம் தேவைப்படும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் தொகுப்பு இறுதி கட்டத்தில் உள்ளது, மேலும் அறிக்கை முடிந்ததும் மத்திய மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணவர்தன குறிப்பிட்டுள்ளார்.