நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  3,363 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்றைய தினம் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டில் இருந்து வருகை தந்த இருவர் உள்பட வெளிநாட்டவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் 24 வெளிநாட்டவர் உள்பட 140 பேர் கொரோனா வைரஸிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,210 ஆக உயர்ந்துள்ளதோடு , கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.