தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்‍கை எடுத்துள்ளது. 

அதன்படி தெனுவர மெனிக்கே (Train No: 1001) கோட்டை - பதுளைக்கிடையில் ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் தினமும் காலை 6.45 மணிக்கு சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

அதேபோல் பதுளையிலிருந்து கோட்டை செல்லும் 1002 ரயிலானது ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் தினமும் காலை 8.00 மணிக்கு சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

பயணிகள் பயணித்துக்கான ஆசன முன் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் கூறியுள்ளது.