கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் தில்லையடி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முந்தல் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (வயது 61) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கனரக லொறியொன்று, தில்லையடி பிரதேசத்தில் மஞ்சள் கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த நபர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.