அரசியலமைப்புக்காக 15 மில்லியன் டொலரை இந்தியா வழங்கவில்லை - கெஹெலிய

28 Sep, 2020 | 05:14 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கு 15 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. 

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உடன்பட்டமைக்குப் பதிலாகவே இந்தியாவினால் அந்த நிதி வழங்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இணைவழி மாநாடொன்று நடைபெற்றது. 

இதன்போது இருநாடுகளினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. 

எனினும் அதுகுறித்து வெளியான செய்திகளில் சில பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவைகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருநாட்டுத்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது பேசப்பட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பில் கருத்துவெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் கூறியதாவது:

இந்தப் பேச்சுவார்த்தையின் போது எமது நாட்டின் வர்த்தகமீதி பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் எதிர்காலத்தில் இதுகுறித்து கவனம் செலுத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. 

அதேபோன்று ஏற்றுமதியை விடவும் பெருமளவான தொகைக்கு இந்தியாவிலிருந்து எமது நாடு பொருட்களை இறக்குமதி செய்வது பற்றியும் பேசப்பட்டது என்றார்.

இதன்போது, கருத்துவெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, பௌத்தமதத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான இந்தியா 15 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. 

எனினும், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் பட்சத்தில் அந்த நிதிவழங்கப்படும் என்று இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 

அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்தியா வழங்குவதற்குத் தீர்மானத்திருக்கும் 15 மில்லியன் டொலர்களுக்கும் அரசியலமைப்பிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19