இலங்கையுடனான டெஸ்ட் தொடரை மீண்டும் ஒத்தி வைப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தலைவர் நஸ்முல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் கொவிட்-19 விதிமுறைகள் காரணமாகவே இவ்வாறு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார். 

அதேநரேம் எதிர்காலத்தில் நிலைமை சீராகும்பட்சத்தில் இந்தத் தொடரை மீண்டும் நடத்தவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒக்டோபரில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்தது.

பெப்ரவரி முதல் இலங்கை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை, மேலும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான கிரிக்கெட் தொடர்களும் கொவிட் 19 நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.