கொழும்பு துறைமுக ஊழியர்களுடன் தொடர்பை பேணிய 34 பேர் தனிமைப்படுத்தலில்

Published By: Digital Desk 3

28 Sep, 2020 | 05:04 PM
image

கொழும்பு துறைமுகத்தின் ஆறு ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 34 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கப்பலில் இருந்த 17 இந்தியர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கப்பலுக்குச் சென்ற இலங்கை பணியாளர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கப்பலிலிருந்த பெரும்பாலான பணியாளர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்படவில்லை என்பதால் அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தின் மூலம் கொரோனா வைரஸ் சமூகப் பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இறுதி கொரோனா வைரஸ் நோயாளியும் குணமடையும் வரை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று லெப்டினன்ட் ஜெனரல் சில்வா மீண்டும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் கொரோனா வைரஸ் தணிக்கும் முயற்சிகளில் பொதுமக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார், எனவே குடிமக்கள் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை புறக்கணிக்கக்கூடாது.

வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08