'எம்டி நியூ டயமண்ட்' கப்பலின் கேப்டனை விளமக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கையை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனினும் கப்பலின் கேப்டனுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடையும் நீதிவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் நீதிபதி பிரியந்தா லியானகே எண்ணெய் கப்பலின் கேப்டனை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்தார்.

குவைத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கரில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர்  கோரியதன் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இந் நிலையில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலின் கேப்டன் இன்று காலை கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜரானதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பதில் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.