பிக்பொஸ் பிரபலம் நடிகர் முகேன் ராவ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் தமிழ் படத்திற்கு வெற்றி என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘வெப்பம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அஞ்சனா அலிகான். 

இவர் புதிதாக இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு ‘வெற்றி’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கதையின் நாயகனாக பிக்பொஸ் மூலம் பிரபலமான நடிகர் முகேன் ராவ் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அனுகீர்த்தி நடிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் அஞ்சனா அலிகான் பேசுகையில்,

“ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை எப்படி நிறைவேற்றுகிறான் என்பதே கதை. 

வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல. அது ஒரு குறியீடு. படத்தின் மொத்த கதையுமே வெற்றியை எப்படி அடைவது என்பதை எக்சன் வித் காதலுடன் சுவராசியமாக விவரிக்கிறது.” என்றார்.

ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி தயாரிக்கும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.