கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கல்பெமீம சந்திக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாய்க்கால பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் புத்தளம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி கவனயீனமற்ற முறையில் வண்டியை செலுத்திச் சென்றமையால் குறித்த முச்சக்கர வண்டியில் பின்னால் இருந்து பயணித்த பெண் வீதியில் வீழ்ந்தமையால் இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விப்பத்தால் குறித்த பெண் படுகாயமடைந்த குறித்த பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சமபவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்