'20' தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளிவந்த பின்னர் எமது முடிவை அறிவிப்போம் - இராதாகிருஷ்ணன் 

Published By: Digital Desk 4

28 Sep, 2020 | 01:58 PM
image

" அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன. சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே '20' தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் வெளிவந்த பின்னர் எமது முடிவை அறிவிப்போம்." 

என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று 28.09.2020 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு ஹர்த்தால், 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஆகியன தொடர்பில் அவர் கூறியதாவது,

" வடக்கு, கிழக்கில் ஜனநாயக ரீதியில் நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு நாமும் ஆதரவு தெரிவிக்கின்றோம். ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் எதிர்ப்பை வெளியிடமாட்டோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான காணொளி மூல கலந்துரையாடல் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றது. 

இதன்போது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பாரத பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டமாக முன்வைக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, இதனை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மோடியின் அறிவிப்பை நாமும் வரவேற்கின்றோம்.

13 விடயத்தில் மோடி அறிவுறுத்தல் வழங்கலாம், ஆனால் அழுத்தம் கொடுக்கமுடியாது என இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் 13 பற்றி பேசப்பட்டுள்ளது. எனவே, சில அமைச்சர்கள் இல்லை என கூறுவதை ஏற்கமுடியாது.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாம் இன்னும் எமது முழுமையான அறிவித்தலை வழங்கவில்லை. எது எப்படியிருந்தாலும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு பொருத்தமானதா என்பதை ஆராயவேண்டும். 19 ஊடாக நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டது.அதனை நாம் ஆதரித்திருந்தோம். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் இருந்த மோதலால் சிக்கல்கள் உருவானதே தவிர 19 ஆவது திருத்தச்சட்டத்தை குறைகூற முடியாது. 

கணக்காய்வு ஆணைக்குழு ஒழிப்பு, பாராளுமன்றத்தை ஓராண்டுக்கு பின் கலைத்தல் உட்பட 20 இல் ஏற்றுக்கொள்ளமுடியாத சில விடயங்கள் உள்ளன. '20' இற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் தாக்கல் செய்துள்ளதால் நாம் தனியாக மனுதாக்கல் செய்யவில்லை.

எனவே, உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் வெளிவந்த பின்னர், 20 இல் எவ்வாறான திருத்தங்கள் இடம்பெறவுள்ளன என்பது உட்பட சில விடயங்களை கருத்திற்கொண்டு எமது முடிவு அறிவிக்கப்படும்." - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11