ஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பயமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

குறித்த நிலநடுக்கம் 5 ரிச்டராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கம் எற்பட்ட பகுதியில் தோகேய் என்ற இடத்தில் அணுமின் நிலையம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அணுமின் நிலையம் கடந்த 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டாலும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதிக்கப்பட்டு வருகிறது.