சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புக்களில் பங்களிப்புச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனியிடமிருந்து தட்டிப்பறித்தார் 30 வயதான எலிசா ஹீலி.

 

நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட்  அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறதுஇதில் ஆரம்ப போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 8 விக்கெட் டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தொடரையும் கைப்பற்றியது.


அவுஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் காப்பாளரான எலிசா ஹீலி, இவ்விரு போட்டிகளிலும் மொத்தமாக பிடிகள்,  2 ஸ்டம்பிங்களைச் செய்தார்இதையடுத்து சர்வதேச இருபதுக்கு 20  போட்டியில் அவர் விக்கெட் காப்பு மூலம் ஆட்டம் இழக்கச் செய்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது.  (114 போட்டிகள் 42 பிடிகள், 50 ஸ்டம்பிங்) .


இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகம் பேரை ஆட்மிழக்கச் செய்த விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை இந்திய முன்னாள் விக்கெட் காப்பாளர் தோனியிடமிருந்து தட்டிப்பறித்தார்.

30 வயதான அலிசா ஹீலி, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற தோனி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் 91 பேரை (98 போட்டிகளில் 57 பிடிகள் மற்றும் 34 ஸ்டம்பிங்ஆட்டம் இழக்கச் செய்துள்ளார்.