நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டத்தில்  குளவி கொட்டுக்கு இலக்காகிய ஏழு தொழிலாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த தோட்ட தொழிலாளர் தமது கருத்தை குறிப்பிடுகையில், 

எமக்கு பல இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிலும் இவ்வாறான குளவி கொட்டுக்கு இலக்காகி நாம் எமது வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். இதுவரை பல இடங்களில் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணித்தும் உள்ளனர். எனவே குளவிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.