அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரியைச் செலுத்தவில்லையென தகவல்கள் கசிந்துள்ளன. மேற்படி தகவலை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமது தொழில்களில் ஏற்பட்ட சரிவே இதற்கான காரணம் என கூறி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தியுள்ளார்.

அத்தோடு,  கடந்த 15 வருடங்களில், 10 வருடங்களில் அவர் வரியே செலுத்தவில்லையென வருமான வரி ஆவணங்களின் தகவல்கள் தெரிவிப்பதாக  நியூயோர்க் டைம்ஸ்  குறிப்பிடுகின்றது. 

குறித்த இச்சர்ச்சை குறித்து, அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் கூறுகையில், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென்றும், எனக்கு கிடைத்த வருமானத்திற்கு நான் வரி செலுத்தி உள்ளேன்  எனவும்தெரிவித்துள்ளார். அதனை அவரது நிறுவனங்களின் சட்டத்தரணியும் தெளிவுபடுத்தியுள்ளார்.