வடக்கு. கிழக்கில் இன்றையதினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் அதனை குழப்பும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் நகரின் வியாபார நிலையங்களிற்கு சென்ற பொலிசார் அதனைத்திறக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஒலிபெருக்கிகள் மூலம் கடையை திறக்குமாறு அறிவித்தல் விடுத்துவருகின்றனர்.

நகரின் அனைத்து பகுதிகளிற்கும் வாகனங்களில் செல்லும் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் கடைகளைத்திறக்குமாறு அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.