சீனாவிற்கு சொந்தமான டிக்டொக் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் பதிவிறக்கங்களுக்கான தடைகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு நீதிபதியால் நிறுத்தி வைக்கப்பட்டன.

பிரபல வீடியோ பகிர்வு செயலியாான டிக்டொக்கை பதிவிறக்குவதைத் தடை செய்யும் திட்டத்தை  அரசாங்கம் சனிக்கிழமை தாமதப்படுத்தியது.

இந்த தடை ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரவிருந்தது. ஆனால் செப்டம்பர்  27ஆம் திகதி இரவு 11.59 மணிக்கு உத்தரவு தாமதமானது.

எனினும், தற்போதுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பயனர்கள் இதை தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால் அவர்கள் தங்கள் தொலைபேசிகளிலிருந்து பயன்பாட்டை நீக்கியிருந்தால், மென்பொருள் புதுப்பிப்புகளை (software updates) வழங்காவிட்டால் அவர்கள் அதை மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியாது.

டிக்டொக்கின் வேண்டுகோளின் பேரில் கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

டிக்டொக் ஒரு அறிக்கையில்,  இந்த முடிவில் மகிழ்ச்சியடைவதாகவும், அதன் உரிமைகளை தொடர்ந்து பாதுகாப்பதாக உறுதியளித்து.

"எங்கள் சட்ட வாதங்களுடன் நீதிமன்றம் உடன்பட்டது மற்றும் டிக்டோக் பயன்பாட்டுத் தடையை அமல்படுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோய்ட் அப் ஸ்டோர்களின் பயன்பாட்டுகளை கட்டாயப்படுத்துவது அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்தங்களை மீறியிருக்கிறது என்று டிக்டொக் வாதிட்டுள்ளது.

சில பயனர்கள் பயன்பாட்டில் சேருவதைத் தடுப்பது அவர்களின் பேச்சு சுதந்திரத்திற்கு சட்டவிரோதமாகத் தடையாக இருப்பதாகவும், முதலில் தன்னை தற்காத்துக் கொள்ள சரியான வாய்ப்பை வழங்காததன் மூலம் உரிய செயல்முறைக்கு நிறுவனத்தின் சொந்த உரிமை மீறப்பட்டிருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

"இந்த அப் ஸ்டோர் தடையை இன்றிரவு சுமத்துவது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன." என்று டிக்டோக்கின்  சட்டக் குழுவின் உறுப்பினர் மேலும் தெரிவித்தார்..

அமெரிக்க அரசாங்கத்தின் வழக்கறிஞர்கள், இந்த செயலியின் நிறுவுனர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சி.சி.பி) "ஊதுகுழல்" என்று குற்றம் சாட்டினார்.

மற்றொரு சீன செயலியான வீ சாட்  ஒரு தடையை எதிர்கொண்டது. ஆனால், அமெரிக்க நீதிமன்றங்களால் அதன் இறுதி நிமிடத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.