முல்லைத்தீவு மாவட்டத்தில் பூரண கதவடைப்பால் முல்லைத்தீவு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில்  முன்னெடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன

 சில பகுதிகளில் சில கடைகள் மாத்திரமே திறந்திருந்தது, இதேவேளை தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாததால் பல்வேறு தேவைகள் கருதி பயணித்தவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக வாரத்தின் முதல் நாள் என்பதால் பாடசாலை ஆசிரியர்கள் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் போக்குவரத்துகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர் நோக்கியதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறந்து இருந்த போதும் மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.