மேல் மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரை மேற்கொண்ட  விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 514 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , ஹெரோயின் வைத்திருந்தமைக்காக அதிக எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 215 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா போதைப் பொருளுடன் 126 பேர் கைது செய்யப்பட்டனர், 108 பேர் சட்டவிரோத மதுபானம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமான மதுபானங்களை வைத்திருந்தமை தொடர்பில் 1205 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடா மற்றும் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 26 பேர் வேறு குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.