கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

சமீபத்திய மருத்துவ புள்ளிவிவரங்களின்படி,  கொரோனாவால் 1,002,137 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனாவால் 33,297,503 கொரோனா பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் குறைந்தது 24,629,887 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழைந்துள்ளார்கள்.

அமெரிக்கா - 209,453 இறப்பு, 7,320,669 பாதிப்பு 

பிரேசில் - 141,776 இறப்பு, 4,732,309 பாதிப்பு

இந்தியா - 95,574 பாதிப்பு, 6,073,348 இறப்பு 

மெக்சிக்கோ -  76,243 இறப்பு,730,317 பாதிப்பு

ஐக்கிய இராச்சியம் - 41,988 இறப்பு , 434,969 பாதிப்பு

இத்தாலி, பெரு, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றிளால் 30,000 க்கும் மேற்பட்டோர்உயிரிழந்துள்ளார்கள்.

தென்கிழக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் நாளந்தம் அதிகளவான தொற்றாளர்கர்களை பதிவு செய்கின்றன.

அதே நேரத்தில் தொற்று வீதங்களைக் குறைத்த பின்னர் சீராக தங்கள் நாடுகளை இயல்புநிலைக்கு திருப்பிய ஐரோப்பிய நாடுகளும் சமீபத்திய நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து அறிக்கை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.