வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.