நாட்டில் அன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, நாளொன்றுக்கு 38 உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் கூறியுள்ளது.

2008 முதல் இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் இலங்கை புற்று நோயாளர்களில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார்.

மேலும், புற்றுநோய் நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலையிலும் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.