-கார்வண்ணன்

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள்,   விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள் பரவலான கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாகி இருக்கிறது.

 2009 மே மாதம் நிகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், புலிகள் சார்ந்த அனைத்து நினைவு நிகழ்வுகளும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டன.

உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் |  Virakesari.lk

 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில், யாருமே திலீபன் நினைவு நாட்களை பற்றி பெரிதாக பேசக்கூடிய நிலை கூட இருக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில், இது 12 நாட்களும் உணர்வுபூர்வமான முறையில் இடம்பெறுவது வழக்கம்.

குறித்த காலத்தில் திலீபனின் போராட்டம் அவரது தியாகத்தின் மேன்மை குறித்தெல்லாம் மக்கள் மத்தியில் பேசப்படக் கூடிய அளவுக்கு சூழ்நிலை இருந்தது.

புலிகளுக்கு பின்னரான காலத்தில் திலீபனை பகிரங்கமாக நினைவேந்தக் கூடிய சூழல் இல்லாதிருந்தது.

ஆனால், குறைந்தபட்சமாக வேனும் திலீபன் பற்றிய நினைவுகள் சிலாகிக்கப்படும் சூழல் இருந்தது.

2015 பின்னர் கிடைத்த ஜனநாயக வெளி திலீபன் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால், இம்முறை நீதிமன்றங்களை கொண்டு பொலிசார் பெற்றிருக்கின்ற தடை உத்தரவுகள், திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் மத்தியில் கூடுதலாக கொண்டு சேர்க்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலை ஏற்படுத்தியது அரசாங்கம் தான். கடந்த சில ஆண்டுகளில் நல்லூரில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் என்று கூறமுடியாது.

அதற்காக திலீபன் திலீபனின் நினைவுகளை தமிழ் மக்கள் மறந்து விட்டதாக அர்த்தமில்லை. காலச் சூழலில் இத்தகைய நிகழ்வுகளில் இருந்து மக்கள் ஒதுங்கி இருந்தார்கள் அவ்வளவு தான்.

தியாகதீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதிநாள்  நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நல்லூரில் உள்ள தியாகி திலீபன் ...

இதற்கு தடைவிதிக்கப் போய் திலீபன் நினைவு நிகழ்வுகள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது அரசாங்கம்.

தடைக்கு எதிர்ப்பை பதிவு செய்ய முனைபவர்கள்  இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் போருக்குப் பின்னர் வளர்ந்துள்ள இளம் சமூகத்தின் மத்தியில் திலீபனின் தியாகம் மீண்டும் அறிமுகமாகும் சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

திலீபனின் நினைவேந்தலை தடுப்பது பயங்கரவாதத்தை தடுப்பதற்கு சமமானது என்று அரசாங்கம் காட்டிக் கொள்கிறது.

இத்தகைய தடைகள் தான் திலீபன் போன்றவர்களின் தியாகங்களின் மீதான கவனிப்புக்களை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒரு பக்கத்தில் அரசாங்கம் திலீபன் மீதான தடையை விதிக்க இன்னொரு பக்கத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

திலீபனின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் அவர் சிங்கள மக்களின் கதாநாயகனாக மாற விரும்புகிறார் போலத் தெரிகிறது.

டக்ளஸ் தேவானந்தா புலியெதிர்ப்பு அரசியலால் வளர்ச்சி பெற்றவர். அவர் இப்போது திலீபனுக்கு எதிரான வெறுப்பை உமிழ்வதன் மூலம், அதனை இன்னும் கூர்மைப்படுத்த முனைந்திருக்கிறார்.

திலீபன் கொலைகாரன்! தியாகியும் அல்ல ஈ.பி.டி.பி டக்ளஸ் சொல்கிறார் - தமிழ்க்  குரல்

நாடாளுமன்றத்தில் திலீபனைப் பற்றி அவர் வர்ணித்த வார்த்தைகள், எந்தவொரு சிங்கள அரசியல்வாதிகளாலோ, ஏன் படை அதிகாரிகளாலோ கூடக் கூறப்பட்டதில்லை.

திலீபன் நினைவேந்தலுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் மீள ஒன்றிணைந்தது, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இதனைக் கொண்டு அவர்கள் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றுபட்டு விடுவார்களோ என்ற அச்சம் வந்து விட்டது என்பதை அவரது நாடாளுமன்ற உரையில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

இது தேர்தலுக்கான கூட்டாக இல்லை என்பதும், அத்தகைய கூட்டாக மாறும் வாய்ப்பு இல்லை என்பதும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியாமல் இருக்காது.

ஆனாலும் அவர், திலீபனையும் மாகாணசபையையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்.

அவர் நாடாளுமன்ற உரையில், திலீபன் மாகாணசபை முறைமைக்கு எதிராக செயற்பட்டவர் என்று புதிய அறிமுகத்தைக் கொடுக்க முனைந்திருக்கிறார்.

திலீபன் உண்ணாவிரதம் இருந்த போதோ, அவர் உயிருடன் இருந்த போதோ, 13 ஆவது திருத்தச்சட்டமோ, அதன் மூலம் மாகாணசபைகளோ உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

தியாகி லெப்.கேணல் திலீபனின் 31-வது நினைவேந்தல் இன்று ஆரம்பம்! | எரிமலை

1988ஆம் ஆண்டில் தான், 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. திலீபன் உயிர் நீத்தது 1987ஆம் ஆண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீபன் இந்தியாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார் என்றொரு கற்பிதத்தை  ஏற்படுத்தவும் முயன்றிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

திலீபனின் 5 அம்சக் கோரிக்கைகளில், இந்தியாவுக்கு எதிரான ஒரு விடயம் கூட இருக்கவில்லை.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். 

இவை தான் அவரது கோரிக்கைகள். இவை அனைத்தும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது.

தம்மிடம் இருந்த ஆயுதங்களைக் களைந்து, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைத் தருவதாக உறுதியளித்த இந்தியா, இந்த தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று தான் திலீபன் எதிர்பார்த்தார். 

இப்போது, நினைவு நாளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் முயற்சிகளை வைத்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை திலீபன் முன்னெடுத்தார் என்ற கற்பிதத்தை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாத்திரமன்றி, இந்திய ஊடகவியலாளர் ஒருவரும் இவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்.

மாகாண சபை முறையை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியாவிடம் கோரும் தமிழ்க் கட்சிகள், இந்தியாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவு நாள் உரிமைக்காக போராட்டம் நடத்துவது, இந்தியாவை அதிருப்திக்குள்ளாக்கும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.

இந்த இரண்டுக்கும் இடையில் முடிச்சுப் போடப்பட்டால், அதுதான் மிகப்பெரிய இராஜதந்திரத் தவறாக இருக்கும்.

இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்காக மகாத்மா காந்தி பெரும் போராட்டங்களை நடத்திய பின்னரும், அவரது நினைவு நாள் பிரிட்டனில் அனுஸ்டிக்கப்படுவதை, அந்த நாட்டு அரசு தடுக்கவில்லை. 

இவ்வாறான நிலையில் திலீபன் நினைவேந்தலுக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவையும், மாகாண சபைகளை பாதுகாப்பதில் இந்தியாவின் கடப்பாட்டையும் முடிச்சுப் போட்டுக் கொண்டால், அது அபத்தமானது.

திலீபனின் தியாகம் இந்தியாவை தலைகுனிய வைத்தது உண்மை. 

திலீபனின் தியாகத்தை நினைவுகூர தடைவிதிப்பதற்கு எதிராக போராடுவதால், மாகாணசபைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து இந்தியா விலகினாலோ, தமிழ்க். கட்சிகளிடம் இருந்து தூர விலகினாலோ அது இன்னும் தலைகுனிவைத்  தான் ஏற்படுத்தும்

திலீபனின் நினைவுகூரலை  கொச்சைப்படுத்தும்,  தவறான வரலாற்றை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிக்கிறார்.

ஆனால், உண்மை வரலாறு, யார் - யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு நிச்சயமாக வைத்தே தீரும்.