தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் உள்ள சாங்ஸாவோ நிலக்கரி சுரங்கமொன்றில் 16 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர்.

குறித்த சுரங்கத்தில் கார்பனோராக்சைடு வாயு அதிபடியாக தாக்கம் காரணமாக 16 பேரும் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுரங்கத்தில் மொத்தம் 17 பேர் சிக்கியிருந்ததாக சோங்கிங் நகராட்சி அரசு தனது சமூக ஊடக கணக்கில் செய்தி வெளியிட்டிருந்தது. அவற்றுள் ஒரு நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனைய 16 பேர் உயிரிழந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

அனர்த்தம் நிகழ்ந்த கிஜியாங் மாவட்டத்தில் உள்ள சுரங்கம் உள்ளூர் எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.