கொரோனா தொற்று நோயானது துபாயில் உள்ள ஐ.சி.சி. தலைமையகத்தயும் தாக்கியுள்ளது.

அதன்படி ஐ.சி.சி.யின் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார நெறிமுறைகளின்படி ஐ.சி.சி. தலைமையகம் தனிமைப்படுத்தப்பட்டு, பூட்ப்பட்டுள்ளது.

கடுமையான சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்காக, ஐ.சி.சி தலைமையகம் சில நாட்கள் மூடப்பட்டிருக்கும் மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து அவர்களது கடமைகளை முன்னெடுப்பார்கள்.

இதேவேளை தலைமையகம் பூட்டப்பட்டிருக்கும் நாட்களில், வளாகத்தில் கிருமி தொற்று நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

ஐ.சி.சி. தலைமையகம் பூட்டப்பட்டாலும்,  ஐ.பி.எல். தொடருக்கோ, அதில் கலந்து கொள்ளும் அணிகளுக்கோ பயிற்சிகளை முன்னெடுக்கவும், போட்டிகளில் விளையாடுவதற்கும் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஐ.சி.சி யிலிருந்து இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், மூத்த குழு உறுப்பினர் ஒருவர் ஐ.சி.சி. தலைமையகத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுளார்.

இந் நிலையில் வெளிப்படுத்தப்பட்டள்ள தகவல்களின்படி பாதிக்கப்பட்ட அனைத்து ஐ.சி.சி ஊழியர்களும், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அத்துடன் ஐ.சி.சி ஊழியர்கள் சில நாட்கள் வீட்டிலிருந்து அவர்களது கடமைகளை முன்னெடுப்பர் என்றும் கூறப்படுகிறது.