முல்லைத்தீவு மாவட்டத்தின் வன பரிபாலன திணைக்களத்தின் மாங்குளம் அலுவலகத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் க.குலேந்திரன்  அவர்கள் முத்துஐயன்கட்டு பகுதியில் வீதியால் சென்றபோது அங்கு வீதியில் கிடந்த வங்கி புத்தகம் ஒன்றினையும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கண்டெடுத்திருக்கிறார் 

வீதியில் கண்டெடுத்த குறித்த பணத்தினை நல்லெண்ண முயற்சியோடு குறித்த நபர்களை கண்டறிந்து அவர்களை மாங்குளம் வன பரிபாலன திணைக்கள  அலுவலகத்திற்கு அழைத்து உரிய ஆவணங்களை பார்வையிட்டு அவர்களிடம் உரிய முறையில் ஒப்படைத்துள்ளார்

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களும் கிடைக்கின்ற பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்காத நிலையும் இருக்கின்ற நிலையில் இன்னும் உரியவர்கள் உடைய பொருளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல மனத்தோடு இவ்வாறு வீதியில் கிடந்து கண்டெடுத்த பணத் தொகையையும் வங்கி புத்தகத்தையும் உரியவரிடம் ஒப்படைத்த குறித்த அதிகாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.