நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 3,208 ஆக அதிகரித்துள்ளது.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்து ஏழு பேரும், தேசிய தொற்று நோய் மற்றும் இரனவில வைத்தியசாலைகளிலிருந்து தலா ஐவரும் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையிலிருந்து நால்வரும், களுபோவில வைத்தியசாலையிலிருந்து ஒருவரும் இவ்வாறு குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,349 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 16 வெளிநாட்டினர் உட்பட 128 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 40 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.