அவுஸ்திரேலியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அதில் உயிர் பிழைத்திருந்த சுமார் 108 திமிங்கிலங்கள் தற்போது மீண்டும் கடலுக்குள் பத்திரமாக விடப்பட்டுள்ளன.

மீட்புப் பணியாளர்கள் முதலில் 270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருப்பதைக் கண்டுள்ள நிலையில், மீண்டும் 200 திமிங்கிலங்கள் வரை வந்து சேர்ந்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருப்பது முதல்முறையாகும் என் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மீட்புப் பணியாளர் ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்து உயிருள்ள திமிங்கிலங்களை கடலுக்குள் விட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.