காலி, தெலிகடை பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட ஒன்பது பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் எல்.எஸ்.டி முத்திரைகள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்னர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின்போது 40 எல்.எஸ்.டி.முத்திரைகளும், 20 போதை மாத்தரைகளும் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 500,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் 25-30 வயதுக்குட்பட்ட கொழும்பு மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.